Tuesday, 30 May 2017
உலுசிலாங்கூர் நாடாளுமன்றம் – மஇகா மீண்டும் வெல்ல முடியுமா?
கோலாலம்பூர் – கடந்த சனி, ஞாயிறு (27,28 மே 2017) இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை மையப்படுத்தி நடந்திருப்பதாலும், அதில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டிருப்பதாலும், அரசியல் பார்வையாளர்களின் கவனம் மீண்டும் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி மீது பதிந்திருக்கிறது.
மஇகா தேசிய இளைஞர் பகுதியின் சார்பில் இரண்டு நாட்கள் பொதுத் தேர்தல் மீதான பயிற்சிக் கருத்தரங்கம் களும்பாங் நகரில் நடத்தப்பட்டது. இது உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய நகராகும்..
இதில் டாக்டர் சுப்ரா கலந்து கொண்டு இளைஞர் தலைவர்களிடையே உரையாற்றினார்.
உலுசிலாங்கூர் மஇகாவின் தொகுதி – விட்டுத் தரமாட்டோம்!
அதே இரண்டு நாட்களில் உலுசிலாங்கூர் தொகுதி மஇகா தலைவர்களுக்கான பொதுத் தேர்தலுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பேராக் மாநிலத்தின் சுங்கை நகரில் மஇகா உலுசிலாங்கூர் தொகுதி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
உலு சிலாங்கூர் தொகுதி ம இ கா ஏற்பாட்டில் நடைபெற்ற மஇகா தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சனிக்கிழமை (27 மே 2017) கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் சுப்ரா “உலுசிலாங்கூர் தொகுதி மஇகாவின் தொகுதி. இதனை யாருக்கும் விட்டுத் தரமாட்டோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம இ கா வேட்பாளர் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதை அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment