True or Fake?

Thursday 12 May 2016

Who is 420?

நீதிமன்றத்தில் “420” குற்றவாளி  யார்?
     டத்தோ ரமணனுக்கு டத்தோ டி.மோகன் பதிலடி!
கோலாலம்பூர் மே 13 –
நான் தொடுக்கப்போகும் வழக்குக்காக காத்திருப்பதாக ரமணன் சூளுரைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாது என் மீது உண்மைக்கு புறம்பாக ஆதாரமில்லாமல் அடுக்கடுக்காக கட்டுக்கதைகளையும், கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். ஆனால் டான்ஸ்ரீ எம்.மகாதேவனிடம் 55 லட்சம் வெள்ளியை தில்லுமுல்லு செய்து ஏமாற்றியமைக்காக நீதிமன்றத்தில் 420 – இன் கீழ் குற்றவாளியாக நிரூபணம் ஆனதை ரமணன் மறந்து விட்டார். என் மீது இந்த மாதிரியான ஒரு குற்றச்சாட்டை சொல்ல முடியுமா? நிரூபிக்க முடியுமா? என மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் டத்தோ ரமணனுக்கு சவால் விடுத்துள்ளார்.
அதோடு இந்த வழக்கின் தீர்ப்பில்  தெளிவாக ரமணன் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டான்ஸ்ரீ மகாதேவனிடம் 55 லட்சம் வெள்ளியை அரசாங்க ஆவணத்தில் முறைகேடு செய்து ஏமாற்றியுள்ளார் என்பது ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்திற்கு வெளியே டான்ஸ்ரீ மகாதேவனிடம் பணத்தை அளித்து இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டாலும் இவர் குற்றவாளி என்பதை மறுக்க முடியுமா? ஆனால் காவல்துறை இவர் மீது ஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. ஒரு குற்றவாளி வெளியில் தைரியமாக மற்றவர்களை நோக்கி பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.
ரமணனின்  அடையாள எண்ணை காவல் நிலையத்தில் கொடுத்தால் போதும் இவர் மீது எண்ணிலடங்கா புகார்களும், குற்றச்சாட்டுக்களும் இருப்பதை அறிய முடியும். என்னைப்பற்றி பேசவோ, விமர்சிக்கவோ தகுதியில்லாத ஒரு கொள்கையில்லாத பச்சோந்தி தான் இந்த ரமணன்.
நான் செய்த குற்றங்கள் என ஆதாரமில்லாமல் பட்டியலிடும் ரமணனுக்கு அதனை நிரூபித்துக்காட்ட திராணி இருக்கா? வாயளவில் அவதூறுகளை பரப்பினால் அதனை மக்கள் நம்பிவிடுவார்கள் என யாரும் பகல் கனவு காண வேண்டாம் என டத்தோ டி.மோகன் கூறினார்.
2-தேசிய பயிற்சி மையங்களை நடத்தி வருகிறேன். வங்கியில் கடன் பெற்று, எனது உழைப்பை வைத்து தான்  அதனை நான் பெற்றேன். இந்த பயிற்சி மையங்கள் இளைஞர் பகுதிக்காக கொடுக்கப்பட்டது என்பது  சுத்தப்பொய் முடிந்தால் அதனை நிரூபித்துக்காட்டட்டும் அதனை விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் என் மீது வீண் பழி சுமத்த வேண்டாம். அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொழில் செய்து படிப்படியாக, கடுமையாக உழைத்து  எனது பொருளாதாரத்தை உயர்த்தியவன் நான். மக்களின் பணத்தை கொண்டோ, அடுத்தவர்களை ஏமாற்றியோ பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை  என்றார் அவர்.
“சூனா நைட்” கணக்கு வழக்குகள் சரியாக உள்ளன. (அக்கவுண்ட்ஸ் வெரி க்ளியர்) ( அய்ம் வெரி கேஃபி) என  மாநாட்டில் சொன்னதை ரமணன் மறந்திருக்கலாம் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ரமணனுக்கு அந்த கணக்கு வழக்குகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அவரை இளைஞர் பகுதி மாநாட்டிற்கு அழைத்தோம். அந்த மாநாட்டில் தான் இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் எனது வங்கிக்கணக்கில் 35 லட்சம் வெள்ளி எப்படி வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பணம் எந்தப்பணம்? யாருடைய பணம்? என்பதை விளக்கமாக சொன்னால் அது குறித்து விளக்கம் அளிக்க நான் தயார்.
மேலும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலையும், அவரது துணைவியாரையும் தாக்குவதற்கு ரமணன்  பணிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் நான் இருந்ததாகவும் இவர்  குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்றில் துளியளவும் உண்மையில்லை. அதே நேரத்தில் இவர் சொல்வதை வைத்துப்பார்க்கையில்  இவருக்கு சொந்தப்புத்தி என்பது கிடையாதா? (I work for instruction) என்றால் இப்பொழுது என்னை தாக்குவதற்கு யார் உத்தரவு போட்டுள்ளார்கள் என்பதை இவர் சொல்வாரா? மேலும் ரமணன் தனது வாயை வாடகைக்கு விட்டுள்ளாரா? வாயை வாடகைக்கு விட்டிருப்பவன் தான் அடுத்தவர்களின் உத்தரவுக்கு இணங்க இன்று ஒன்றும், நாளை ஒன்றும் மாற்றி  மாற்றி பேசுவான்.
என் கணக்குப்படி இன்னும் சில மாதங்களில் எனக்கு உத்தரவு போட்டுள்ளவரையே இவர்  மிகவும் மோசமாக விமர்சிக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களிலும் விமர்சித்துள்ளார் என அவர் நினைவுப்படுத்தினார்.
ரமணன்  தவளை போல  இங்கும், அங்கும்  தாவி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். என்னைப்பொறுத்த வரையில் இவரது அவதூறுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நான் அசரப்போவதில்லை என் மீது குற்றம் இருந்தால் அதனை முதலில் நிரூபித்துக்காட்டுவதே புத்திச்சாலித்தனம். அதனை விடுத்து வெறுமனே புலம்பிக்கொண்டிருப்பதில் புண்ணியம் இல்லை.
சிலர் என் அரசியல் வளர்ச்சியின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் கொள்கைகளை இழந்து மறைமுகமாக என்னைத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.  “காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும் என்பார்கள்” அதுபோல நானும் பல அவதூறுகளையும், பொய்க்குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்கி விட்டேன் ஆகவே நான் இதனை ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.
இருப்பினும் சமுதாய சிந்தனை கொண்டும், அதன் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டும் பணியாற்றி வரும் என் மீதான குற்றச்சாட்டுகளின் தொடர்பில் உண்மை நிலையை சமுதாயத்தினர்களுக்கு விளக்கவும், ரமணன் போன்ற  பொய்யர்களின் கபட நாடகத்தை ஒழித்துக்கட்டவும் இந்த அறிக்கையின் வாயிலாக எனது விளக்கத்தை தந்துள்ளேன் என டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment