True or Fake?

Saturday, 21 May 2016

Jumlah keseluruhan bantuan yang telah diagihkan kepada 142. orang penerima pada hari ini adalah RM881,950.00

#SubraPower.  Hari ini telah diadakan Majlis Penyerahan Cek Bantuan kepada badan kebajikan, bantuan pendidikan dan badan bukan kerajaan (NGO).

Penerima bantuan pada hari ini, merupakan mereka yang mempunyai pelbagai latar belakang yang berbeza. Sebahagian mereka memerlukan dana untuk pelbagai perkara seperti melanjutkan pelajaran, memerlukan bantuan sara hidup untuk mendapatkan rawatan dan ada juga merupakan badan bukan kerajaan yang memerlukan dana dalam memastikan organisasi mereka dapat terus berfungsi dengan baik.

Jumlah keseluruhan bantuan yang telah diagihkan kepada 142. orang penerima pada hari ini adalah RM881,950.00. Semoga dengan penyerahan bantuan pada hari ini, ia akan dapat meringankan beban serta membantu penerima dalam meneruskan kehidupan seperti biasa.

இன்று, சுமார் 9 ஆலயங்கள், 49 பொது இயக்கங்கள், கல்வி, பொருளாதாரம், மருத்துவம் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் என சமூகவியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் சுமார் 84 தனிநபர்கள் என 142 பேருக்கு இவ்வாண்டில் மூன்றாம் கட்டமாக சுமார் ரிங்கிட் மலேசியா 881,950 தொகை மானியமாக வழங்கும் நிகழ்ச்சி புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

ஆலயங்கள், சமூக இயக்கங்கள் உட்பட சிலர் தனிப்பட்ட காரணத்தினாலும் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். குறிப்பாக, கல்வி, மருத்துவம், வணீக முதலீடு, வீட்டு அடிப்படை தேவைகளுக்கு என பல்வேறு நிலையில் உதவி கோரி மனு விண்ணப்பம் செய்கின்றனர். கிடைக்கப்பெறும் மனுவின் அடிப்படையில், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற ஒரு கணிசமான தொகையை அரசாங்கமும் தொடர்ந்தாற்போல் உதவியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் சிலருக்கு, அரசாங்கத்தில் பல நிலைகளில் உதவிகள் கிடைக்கப் பெற்றாலும், சில நேரங்களில் அவர்கள் பொருளாதார ரீதியில் சுமையை எதிர்நோக்குகின்றனர். அவர்களுடைய அந்தச் சுமையைக் குறைப்பதற்காக இதுபோன்று அரசாங்கத்திடம் பல்வேறு நிலைகளிலிலிருந்து உதவிகள் பெற்றுத் தரப்படுகின்றது. உதவிக்கோரும் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது கடினம். அதேவேளையில், இன்று வழங்கப்பட்டுள்ள இந்த நிதி ஒதுக்கீடானது ஓரளவுக்கு அவர்களுடைய பொருளாதார சிக்கலைக் குறைக்க உதவியாக இருக்கும் என்று தாம் பெரிதும் நம்புகின்றேன்.

இருந்தபோதிலும், நம் சமுதாயத்தினரிடையே தனித்து இயங்கும் வல்லமை பெரிதும் தேவைப்படுகின்றது. சமுதாயத்தில் எந்த அளவுக்கு நாம் சொந்த முயற்சியிலும் சொந்தக் காலிலும் நிற்கக்கூடிய நிலை ஏற்படுகின்றதோ அன்றுதான் நம்மவரிடையே பிறரின் உதவியை ஏதிர்பார்க்கும் எண்ணிக்கையும் குறையும். அதற்கு சமுதாயத்தினரிடையே முழுமையான வளர்ச்சி அவசியமாகின்றது. இந்திய சமுதாயம் எல்லா நிலையும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ, அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ம.இ.கா தொடர்ந்து பல ஆக்ககரமான முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதனைத்தவிர்த்து ஆலயங்களைக் கட்டக்கூடியவர்கள் நாட்டில் இருக்கக்கூடிய விதிமுறைகளையும் சட்டத்திட்டங்களையும்  மதித்து அதற்குட்பட்டு கட்டக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டோம் என்றால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் சட்டத்திட்டங்களை மீறி செய்வதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுகின்றது. சமுதாயத்தினரிடையே உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அளவில் அமைந்து விடுகின்றது. ஆகையினால், இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செய்யக்கூடிய காரியங்களை முறையாக செய்ய வேண்டும். இதனை அனைவரும் சிந்தித்துப் பொறுப்புடன் நடந்து கொள்வதன் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். 

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
20 மே 2016

No comments:

Post a Comment