True or Fake?

Thursday 12 May 2016

Pengorbanan Dan Jasa Warga Jururawat Sentiasa Dihargai.

Pada hari ini saya ingin memberi pengiktirafan ke atas sumbangan serta jasa anggota jururawat di seluruh Malaysia sempena sambutan Hari Jururawat Peringkat Kebangsaan.
“தாதியர்கள்: உருமாற்றத்தின் உந்துச்சத்தி: சுகாதார அமைப்புகளை மேம்படுத்தும்’ ஆயுட்கால சத்தி

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே மாதம் 12 ஆம் திகதி, சர்வதேச தாதியர்  தினம்  (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள்  சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பையும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுக்கூறும் பொருட்டும், 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளைச் சிறப்பாக நினைவுகூறும் வகையிலும் இத்தினம் சர்வதேச அளவில் தாதியர் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தாதியர் தொழில் என்பது ஒரு புனிதமான தொழில் மட்டுமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடிய ஒரு தொழிலும் ஆகும். தன்னலத்தைக் கருதாமல் பொது நலத்தைக் கருதில் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுபவர்களே தாதியர்கள். சிகிச்சைக்கு வரும் ஒரு நோயாளிக்குச் சிகிச்சை என்பது ஒரு பகுதி மட்டுமே. அதைத்தவிர, அன்பும் அரவணைப்பும் நிறைந்த சேவை மற்றுமொரு பகுதியாகும்.

அத்தகைய சேவைகளைத் தாதியர்கள் நோயாளிகளுக்கு வழங்கினாலே அவர்களது பாதி நோய் குனமடைந்துவிடும். மீதப் பாதியைத்தான் மருந்தும் மாத்திரைகளும் குணப்படுத்தும். அதன் அடிப்படையில், தாதியர்கள் அனைவரும் இந்தத் தாதியர் தொழிலின் புனிதத் தன்மையை அறிந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.

அவ்வகையில் இவ்வாண்டு “தாதியர்கள் : உருமாற்றத்தின் உந்துச்சத்தி : சுகாதார அமைப்புகளை மேம்படுத்தும்’ ஆயுட்கால சத்தி எனும் கருப்பொருளோடு உலகத் தாதியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த 1800ஆம் ஆண்டுகளிலிருந்து தாதியர் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. அன்று தொடங்கி நாட்டில் பல தாதியர் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டதோடு, ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 3000 தாதியர்கள் தாதிமை பயிற்சிப்பெற்று தங்கள் சேவையைத் தொடங்குவதில் மலேசிய சுகாதரா அமைச்சு வெற்றிக் கண்டுள்ளது.  மேலும், நாட்டில் கடந்த ஆண்டு கணக்கறிக்கையின்படி, அரசாங்கம், தனியார், மருந்தகம், பயிற்றுனர் என அனைத்துப் பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 126,637 தாதியர்கள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, மருத்துவமனைக்கு வருகைப்புரியும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை (Primary Care) அளிப்பது தாதியர்கள்தான். அதன் பிறகே மருத்துவ உதவியாளர்களும் மருத்துவர்களும் தாதியர்களின் முதலுதவிக்கேற்ப அடுத்தக்கட்ட சிகிச்சை வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆரம்ப நிலை மருத்துவ சிகிச்சைக்குத் தாதியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதன்வழி, தாதியர்கள் அவர்களது சேவைத் திறனை மேம்படுத்தி மருத்துவத்துறையில் உருமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உந்துசத்திகளாகின்றனர். மேலும், கிராமப்புற பகுதிவாழ் மக்களுக்குரிய மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் தாதியர்கள் முதன்மை வகிக்கின்றனர்.

அவ்வகையில், இவ்வாண்டுக்கான தாதியர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் மிகவும் ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் தாதியர் தொழில் என்பது மிகவும் சவால் நிறைந்ததாகவே கருதப்படும். அத்தகைய சவால்களை எதிர்கொள்ள தாதியர் துறைக்கான அடிப்படைக் கல்வித் தகுதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு தாதியர்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில், தாதியர்களுக்குரிய நிபுணத்துவ துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தாதியர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, தன்னலம் கருதாமால் பொதுமக்களின் தேவை அறிந்து சேவையாற்றி மருத்துவ மேம்பாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழும் அனைத்துத் தாதியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை இப்புனித நாளில் தெரிவித்துக் கொள்வதில் சுகாதார அமைச்சர் என்னும் முறையில் பெருமிதம் கொள்கிறேன்.

டத்தோஸ்ரீ டாக்டர்  ச. சுப்பிரமணியம்
11 மே 2016

Seperti yang kita sedia maklum, bidang kejururawatan merupakan nadi penting di dalam perkhidmatan kesihatan. Semoga dengan sambutan yang disambut setiap tahun akan memberi motivasi dan pemangkin kepada seluruh jururawat di Malaysia tidak kira di dalam sektor awam dan swasta untuk terus berkhidmat dan meningkat mutu kerja.
Sehingga Disember 2015, terdapat seramai 88,908 jururawat di Kementerian Kesihatan Malaysia dan 37,729 orang di sektor Awam dan Swasta. Nisbah jururawat kepada penduduk di Malaysia adalah 1:297. Nisbah jururawat kepada penduduk yang disarankan oleh Pertubuhan Kesihatan Sedunia adalah 1:200.  Mengimbas berkenaan sejarah perkhidmatan kejururawatan di Malaysia, ia telah bermula di Pulau Pinang dan Singapura yang di pelapori oleh East India Co.  Perkembangan perkhidmatan jururawat di Malaysia terus berkembang selaras dengan kepesatan pembangunan negara. Pada tahun 1938, latihan jururawat di Malaysia yang pertama telah dijalankan di Johor Bahru. Seterusnya Sekolah Kejururawatan  telah dibangunkan di Pulau Pinang dan Kuala Lumpur pada tahun 1946.
Pada masa kini, terdapat banyak kolej kejururawatan di seluruh Malaysia termasuk di Sabah dan Sarawak bagi memenuhi keperluan di dalam bidang perkhidmatan kesihatan. Pada awalnya, kursus kejururawatan bermula dengan latihan praktikal. Namun, pengajian di dalam bidang kejururawatan kini menawarkan peringkat sijil dan diploma. Terdapat juga para jururawat yang memiliki kelulusan ijazah. Selaras dengan kemajuan dan kepesatan yang dihadapi oleh Malaysia, KKM berharap pada masa akan datang, kriteria utama bagi pengambilan anggota jururawat ialah memiliki kelulusan ijazah.  Namun, perubahan ini memerlukan kajian dan pelbagai langkah bagi memastikan impian ini dapat dicapai.
Peranan jururawat di dalam perkhidmatan kesihatan amatlah penting terutama bagi mereka yang bertugas di kawasan luar bandar dan pedalaman. Ini kerana mereka merupakan orang yang paling hampir dengan penduduk. Sebagai contoh, jururawat desa yang bertugas di Klinik Ibu dan Anak. Mereka memainkan peranan dalam menyampaikan maklumat berkaitan kepentingan imunisasi, penyusuan ibu, pemakanan dan penjagaan bayi dengan betul. Ia akan dapat meningkatkan mutu kesihatan rakyat Malaysia.
Selain daripada itu, jururawat juga disarankan untuk mempunyai bidang pengkhususan tertentu.  Ia akan dapat memastikan rakyat mendapat perkhidamtan yang lebih bermutu. Sebagai contoh Standard Operating Procedure (SOP) yang telah ditetapkan oleh KKM adalah mewajibkan agar setiap pusat dialisis mempunyai jururawat yang telah menjalani latihan berkaitan penyeliaan rawatan dialisis. Jika kriteria ini tidak dipenuhi, pusat dialisis tersebut tidak boleh beroperasi.
Akhir sekali, dengan ini saya mengucapkan Selamat Hari Jururawat kepada seluruh jururawat di Malaysia. Semoga kalian akan terus bersedia untuk berkhidmat dan berkorban untuk kepentingan masyarakat. Sumbangan anda, tidak kira di dalam sektor awam mahupun swasta, amatlah dihargai dan diucapkan ribuan terima kasih.

No comments:

Post a Comment