True or Fake?

Monday, 9 May 2016

ரமணன், ராமலிங்கத்தின் கீழ்த்தரமான அரசியல் சதிகளுக்கு எச்சரிக்கை!


     டத்தோ டி.மோகன் தலைமையில் போலீஸ் புகார்!
பூச்சோங் மே 8 –  மஇகாவில் அரசியல் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில்  என்னை குறி வைத்து ரமணன், ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கீழத்தரமான  அரசியல் செய்து வருகிறார்கள். சம்பந்தமில்லாத சிவசுப்ரமணியத்தின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு என்  மீது பொய்ப்புகாரும்  அளித்துள்ளார்கள். இதனை கண்டித்தும், பழனிவேல் தரப்பினரின் சூழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணமும்  பூச்சோங் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் அளித்துள்ளதாகவும், இதற்கு காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் மஇகாவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருதய நோய் காரணமாக கஷ்டமான சூழலை எதிர்நோக்கியிருக்கும் சிவசுப்ரமணியத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியது. அவரை வைத்து அரசியல் சூழ்ச்சிகள் செய்வது நல்லதல்ல. சிவசுப்ரமணியம்  மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவலை முன்பே அவரது நண்பர் மோகன் என்பவர் என்னிடம் தொலைபேசி வழி தெரிவித்திருந்தார். ஆகவே அவரை  சந்திக்க நான் கடந்த 2-ம் தேதி முடிவு எடுத்திருந்த நிலையில் தற்செயலாக அன்றைய தினமே இவரது முகத்தை காட்டி  என்னை தாக்கி செய்தி வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
அத்தகையை சூழலிலும் அரசியல் கருத்துக்களை மனதில் வைத்துக்கொள்ளாது நான் நலன் விசாரிக்க சென்ற பொழுது அவர் தான்  என்னை கட்டி அணைத்து மன்னித்து விடுங்கள்! எனக்கும் இந்த செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரமணன் மற்றும் ராமலிங்கம் தான் இந்த செய்தியை கொடுத்துள்ளார்கள். என்னிடம் ஒரு செய்தியை உனது பெயரில் போட்டிருக்கிறோம் என்ற தகவலை மட்டுமே சொன்னதாகவும், உங்களை சாடும் செய்தி என்பது எனக்கு தெரியாது எனவும் மிகவும் வருத்தப்பட்டு கூறினார்.
அதோடு மட்டுமில்லாது  டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொலைபேசி வழி கூட நலம் விசாரிக்கவில்லை. டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் என்னிடம் நலம் விசாரித்தார்.  நீங்கள் நேரிடையாக நலம் விசாரிக்க வந்துள்ளது ஆறுதலாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
என்னைப்பொறுத்தவரையில் சிவசுப்ரமணியம் தனது முகத்தையும், வாயையும் வாடகைக்கு விடும் நபர். இவரை வைத்து சிலர் அரசியல் சதிகளை அரங்கேற்றி வருகிறார்கள். நான் நலன் விசாரிக்க சென்ற நிகழ்வையும் அரசியலாக்கும் கோணத்தில் நான் சிவசுப்ரமணியத்திற்கு கொலை மிரட்டல் விட்டதாக பொய்ப்புகார் அளித்துள்ளார்கள்.
மருத்துவமனைக்கு சென்று கொலை மிரட்டல் விட்டதாக சொல்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் தமிழ்ப்படங்களில் வருவது போலத்தான் எனக்குத் தோன்றியது. இந்த கூற்றை மெய்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினரால் கண்டிப்பாக முடியாது. வெறுமனே பொய்களை மட்டுமே நம்பி ரமணன், ராமலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் மஇகாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதையும் சில குள்ள நரிகள் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்த விவகாரத்தைப்பொறுத்த வரையில் எங்களிடம் ஆதாரம் இருக்கின்ற நிலையில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முனைப்பு காட்டியுள்ளோம். மேலும் காவல்துறை இரண்டு தரப்புகளிடமும் தீர விசாரணை செய்து உண்மையை உணர்த்த வேண்டும். இந்த மாதிரியாக பழனிவேல் தரப்பினரின் அரசியல் சூழ்ச்சிகளை பார்க்கையில் ரமணன், ராமலிங்கம் போன்றவர்கள் எப்படியெல்லாம் ஒரு பொய்யையும், ஒருவரின் பரிதாப நிலையையும்  வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.
தங்களின் சுயநலத்துக்கு அப்பாவி ஒருவரை பகடைக்காயாக்க நினைக்க வேண்டாம். இதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன் என டத்தோ டி.மோகன் கூறினார்.

No comments:

Post a Comment