True or Fake?

Monday 13 February 2017

ம இ காவின் விவேகமான செயல்பாட்டாலும் ஆக்கப்பூர்வ நடவடிகைகளாலும் பேராக் மாநில அரசு டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையில் இந்திய சமுதாயத்திற்காக நன் நிலையிலான மேம்பாட்டு உதவிகளை வழங்கி வருகிறது – டத்தோ இளங்கோ தகவல்.

ம இ காவின் விவேகமான செயல்பாட்டாலும் ஆக்கப்பூர்வ நடவடிகைகளாலும் பேராக் மாநில அரசு டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையில் இந்திய சமுதாயத்திற்காக நன் நிலையிலான மேம்பாட்டு உதவிகளை வழங்கி வருகிறது – டத்தோ இளங்கோ தகவல்.

  ஈப்போ – பேராக் மாநிலத்தில் ம இ கா மேற்கொள்ளும் விவேகமான செயல்பாட்டாலும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளாலும் பேராக் மாநில அரசு டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தலைமையில் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கான நன் நிலையிலான மேம்பாட்டு உதவிகளை செய்து வருவதாக மாநில ம இ கா தலைவரும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ வ.இளங்கோ பெருமிதமாய் கூறினார்.

    பேராக் மாநிலத்தில் இயங்கி வரும் 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் அதன் கல்வி வளர்ச்சிக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு வெ.10 லட்சத்தை ஒதுக்குவதாக கூறிய அவர் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் தமிழ்ப்பள்ளியில் கல்வி வளர்ச்சியோடு வறுமை நிலை மாணவர்களின் பயன்பாட்டிற்க்கும் விவேகமாய் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

   அதுமட்டுமின்றி,ஒதுக்கப்படும் நிதியில் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார சிக்கலையும் குடும்ப சூழலின் காரணியமாய் உயர்கல்வியை தொடர்வதில் பிரச்னையை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாய் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய டத்தோ இளங்கோ இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அந்நிதி நிறைவாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

   மேலும்,தமிழ்ப்பள்ளிகளுக்கு நகலக கருவி உட்பட தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் அடிப்படை செலவீனங்களுக்கும் ஆண்டுதோரும் ஒதுக்கப்படும் நிதி பெரும் பங்களிப்பு செய்வதோடு மாணவர்கள் நல நிகழ்வுகளுக்கும் தேவையான தேவையான அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ நினைவுக்கூர்ந்தார்.கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி அதன் இலக்கிற்காக முறையாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

  பள்ளிக்கூடங்களை போல நம்மினத்தின் அடையாளமாகவும் வரலாறாகவும் பேராக் மாநிலத்தில் உயிர்ப்பித்திருக்கும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் அதன் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது.இதில் நிலப்பிரச்னைகளை எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு நன் தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலங்களும் பெற்று தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.

   அதுமட்டுமின்றி,ஈப்போ புந்தோங்கில் மின் சுடலை நிர்மாணிப்பதற்கான செலவினத்தை மாநில அரசின் மூலம் பல லட்சம் வெள்ளியை பெற்று தந்தோடு தைப்பூசத்தின் முதல் நாள் ஈப்போ கல்லுமலை ஆலயத்திற்கு வருகை அளித்த மாநில மந்திரி பெசாரின் புந்தோங் மின் சுடலை பயன்பாட்டிற்காக மேலும் வெ.50,000ஐ பெற்றும் தந்துள்ளோம் எனவும் கூறிய டத்தோ இளங்கோ புந்தோங்கை தவிர்த்து தைப்பிங்,சித்தியவான்,சுங்கை சிப்புட் மற்றும் உத்தான் மெலிந்தாங் ஆகிய பகுதிகளிலும் மின்சுடலை நிர்மாணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் சில இடங்களில் அப்பணி அதன் நிறைவை எட்டும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

   இதற்கிடையில்,இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்கும் அதன் சமய காரியங்களுக்கும் தேவையான மானியங்களை வழங்கி வரும் வேளையில் சமூக உணர்வோடும் நம்மினத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் பங்காற்றும் நோக்கில் பேராக் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு சாரா இயக்கங்களுக்கும் தேவைகளுக்கு ஏற்ப அரசு மானியங்களையும் வழங்கி வருவதாக கூறிய மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ அலுவலகத்திற்கு உடனடி உதவி நாடி வரும் மக்களுக்கும் சமூக உணர்வோடு உடனடி உதவிகளையும் செய்து வருவதாகவும் சுட்டிக்காண்பித்தார்.

   இந்த உதவிகளும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீரின் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ கூறினார்.இதற்கிடையில்,வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் அதன் நடவு பணிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் சில கால அவகாசத்திற்கு பிறகு அறுவடை மேற்கொள்ளும் போது இம்மாநில இந்திய மாணவர்கள் மேலும் கூடுதலாக பயன்பெறும் நிலை உருவாகும் என்றும் நினைவுறுத்தினார்.

    இவற்றை தவிர்த்து பேராக் மாநில இந்திய சமூகம் பெரும் பயன்பெறும் வகையிலான புதிய மேம்பாட்டுத் திட்டங்களும் வரையப்பட்டு வருவதாக சுட்டிக்காண்பித்த டத்தோ இளங்கோ இத்திட்டங்கள் யாவும் அதன் இலக்கை அடையவும் வெற்றிகரமாய் முன்னோக்கி செல்வதற்கும் எல்லாத் தரப்பு சமூக மக்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

   இந்நிலையில்,தனக்கெதிரான விமர்சங்களை தாம் தடுக்க விரும்பவில்லை என கூறிய அவர் விமர்சனங்களை தாம் எப்போதும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையோடு இருப்பதாகவும் கூறினார்.பேராக் மாநில அரசாங்கத்தில் இந்திய சமூகத்தின் பிரதிநிதியார் தாம் இருக்கும் பட்சத்தில் இம்மாதிரியான விமர்சங்கள் தவிர்க்க முடியாது என்பதை தாம் உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.ஆனால்,விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும் விவேகமாகவும் இருத்தல் வேண்டும்.அஃது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாய் இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.

    இருப்பினும்,தன்னை விமர்சனம் செய்பவர்களும் தன்னோடு இணைந்து பயணம் செய்வதை விரும்பதாக கூறிய அவர் இந்திய சமுதாயத்திற்கு பெரும் நன்மையை கொண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம் எனும் விவேகமான தூரநோக்கு எண்ணத்தோடு வெளிப்படையான சிந்தனையோடும் தாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ தனது அறிவார்ந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்து பயணிக்க தாம் தயார் என கூறிய டத்தோ இளங்கோ நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு பாடுவோம் வாரீர் என டத்தோ இளங்கோ அனைத்து தரப்பிற்கும் வேண்டுக்கோள் விடுத்தார்.

    பேராக் மாநில அரசாங்கத்தின் மூலம் கடந்தக்காலங்களிலும் சரி நடப்பியல் சூழலிலும் சரி பேராக் மாநில ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருவதோடு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் நிறைவாக செய்து வந்துள்ளது.இந்திய சமுதாயமும் நம்மை சார்ந்த வரலாற்று அடையாளங்களும் பேராக் மாநிலத்தில் சிறந்த மதிப்போடும் கீர்த்தியோடும் உயிர்ப்பித்திருக்க பேராக் மாநில ம இ காவின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானது என்றும் டத்தோ இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment