True or Fake?

Monday, 20 February 2017

“மாணவர் சமுதாயத்துடன் உறவுகளை மஇகா வலுவாக்கி வருகின்றது” – டாக்டர் சுப்ரா!

செர்டாங் – நேற்று செர்டாங் புத்ரா பல்கலைக் கழகத்தில் ம.இ.கா புத்ரா பிரிவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான போட்டி விளையாட்டு அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மாணவர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களோடு மஇகாவின் பல்வேறு பிரிவினர்களும் அணுக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் கூறினார்.

ம.இ.கா புத்ரா பிரிவினர் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான போட்டி விளையாட்டு அறிமுக விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய டாக்டர் சுப்ரா “நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை ஒருங்கே கண்டது மனத்திற்கு நிறைவைக் கொடுத்தது. எதிர்காலச் சந்ததியினர்களான மாணவர்கள் சிறப்பாகவும் நலமாகவும் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்; சமுதாயம் நன்றாக இருக்கும்; மக்களும் நன்றாக இருப்பர். அவ்வகையில், பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் வருங்காலத்தில் பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அவர்களோடு ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசாங்கத்திற்கும், அரசியலைச் சார்ந்தவர்களுக்கும் மிக முக்கியமாகும்” என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி, உதவித் தலைவர் டி.மோகன், புத்ரா பிரிவுத் தலைவர் யுவராஜா, ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“அதன் அடிப்படையில், ம.இ.கா புத்ரா பிரிவினர் வழியாக கடந்த ஓராண்டுகளாகப் பல்வேறு திட்டங்களையும் அணுகுமுறைகளையும் வகுத்து பல்கலைக்கழக மாணவர்களிடையே நெருக்கமான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காகச் செயலாற்றி வருகின்றனர். அந்த உறவின் அடிப்படையில், மாணவர்கள் அரசியல் தலைவகளையும்; அரசியல் தலைவர்கள் மாணவர்களையும் புரிந்து கொண்டு எதிர்காலத்தை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிருணயிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்பதே இத்திட்டங்களின் தலையாய நோக்கமாகும்” என்றும் சுப்ரா தனது உரையில் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment