காற்றின் பெயர்கள்.......
கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ? உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று".
இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை
No comments:
Post a Comment