True or Fake?

Thursday, 6 April 2017

கால்பந்து துறையில் இந்தியர்களின் ஆளுமை உயிர்ப்பிக்க வேண்டும் – தொலைந்துப் போன வரலாற்று சாதனைகளை மீட்க வேண்டும்

காப்பார் – கால்பந்து துறையில் தேசிய நிலையில் இந்திய விளையாட்டாளர்களின் வரலாற்று சாதனை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.கால்பந்து துறையில் கொடிக்கட்டி பறந்த நம் இனத்தின் பெருமை இன்றைய தலைமுறையினால் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என காப்பார் தொகுதி ம இ கா தலைவரும் சமூக சிந்தனையாளருமான கோபாலக்கிருஸ்ணன் நினைவுறுத்தினார்.
   கால்பந்து துறையில் தொலைந்துப் போன நமது ஆளுமை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் மீபா மூலம் இந்திய இளைஞர்கள் தங்களின் கால்பந்து திறனை அதிகரித்துக் கொள்வதோடு அதன் மூலம் கிடைப்பெறும் வாய்ப்பினை நன் முறையில் பயன்படுத்தி மாநில குழுக்களிலும் தேசிய குழுவிலும் இடம் பெறுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்தாண்டு மீபா அணி மலேசிய எப் ஏ எம் கிண்ணத்தை வென்று சாதனை படைத்ததையும் பெருமித்துடன் நினைவுக்கூர்ந்த அவர் கால்பந்து துறையில் இந்திய இளைஞர்களின் சாதனைகள் தொடர வேண்டும் என நினைவுறுத்தினார்.காப்பார் வட்டாரத்தில் 22 கால்பந்து குழுக்கள் கலந்துக் கொண்ட கால்பந்து போட்டியினை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
    நாட்டில் அதிகமான இந்திய இளைஞர்கள் கால்பந்து துறையில் சிறந்து விளங்குவதாகவும் அவர்களின் ஆற்றலும் தனித்துவ திறமையும் பெருமிதம் கொள்ளும் அளவில் இருப்பதாகவும் கூறிய அவர் காப்பார் வட்டாரத்திலும் தனித்துவமான கால்பந்து விளையாட்டாளர்கள் இருப்பதாகவும் கூறினார்.அதேவேளையில்,தமிழ்ப்பள்ளிக்கூடம் மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் ஆற்றல் மிக்க இந்திய மாணவர்கள் கால்பந்து துறையில் மிளிர்வதாகவும் கூறினார்.
    ஆற்றலும் தனித்துவ திறமையும் கொண்டிருக்கும் மாணவர்களை தத்தம் பெற்றோர்கள் வாய்ப்புகள் இருக்கும் இடங்களை தேடி சென்று அம்மாணவர்களின் எதிர்காலத்தை நன் நிலைக்கு உயர்ந்திட வழி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.அதேவேளையில்,இவ்வட்டாரத்தில் இயங்கும் கால்பந்து கிளாப்க்கள்  இளம் ஆட்டக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பெரும் பங்காற்றவும் வேண்டும் என்றார்.
நாட்டில் கால்பந்து துறையில் கொடிக்கட்டி பறந்த ஸ்பைடர்மேன் அமரர் டத்தோ ஆறுமுகம்,செண்பகமாறன்,மணியம்,ஜெயகாந்தன்,டத்தோ கருத்து,டத்தோ இராஜகோபால்,கே.பத்மநாதன் உட்பட பலரின் வரிசையில் இன்றைய இளம் ஆட்டக்காரர்களும் இடம் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் குறிப்பாக காப்பார் வட்டார இந்திய ஆட்டக்காரர்கள் அந்த பெருமிதமான இடத்தை நிரப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
    மலேசிய விளையாட்டு உலகில் இந்திய சமுதாயத்தின் சாதனைகள் மீண்டும் உயிர்ப்பிக்க அத்துறையில் நாம் மீண்டும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் காப்பார் வட்டாரத்தில் கால்பந்து உட்பட அதிகமான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.விளையாட்டுத் துறையில் நம் இன இளைஞர்கள் சாதனைகளை புரிய தொகுதி ம இ கா எப்போதும் பெரும் ஆதரவாகவும் நன் நிலையிலான ஒத்துழைப்பினையும் வழங்கிடும் என்றும் கோபாலக்கிருஸ்ணன் உறுதி அளித்தார்.


No comments:

Post a Comment