True or Fake?

Wednesday 1 March 2017

கின்ராரா பள்ளி இணைக் கட்டட வேலைகள் அடுத்த வாரம் ஆரம்பம்!



பூச்சோங், பிப்.28- தேசிய வகை பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டட வேலைகள், ஒரு சில காரணங்களினால்  காலதாமதாகி வந்த நிலையில், அடுத்த ஒரு வார காலத்தில் இதன் பணிகள் தொடங்கப் படவுள்ளன.
பள்ளியின் இணைக்கட்டடம் தொடர்பான பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப் படவிருப்பதாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு வரைவுத் திட்டக் குழுத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன், மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தப் பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் இணைக் கட்டடத்திற்கு பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி சில பிரச்சனைகளின் அடிப்படையில் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 
அதே நேரத்தில் அதற்கான செலவுத் தொகையும் அதிகரித்தது. இவை ஈடுகட்டப்பட்டு, இந்தப் பள்ளிக்கு பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி தரமான இணைக் கட்டடம் அமைக்கும் பணி, மார்ச் 6ஆம் தேதியிலிருந்து. ஆரம்பமாகின்றன என டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.  
இந்த இணைக் கட்டடம் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், காலம் தாமதத்தினால் அதிகரித்த செலவுத் தொகையை ஈடுகட்ட பள்ளி வாரியத் தலைவரான டத்தோஸ்ரீ இராஜேந்திரன், 76,000 ரிங்கிட் நிதி வழங்க முன்வந்துள்ளார்.
குத்தகையாளரும் தங்களது பங்களிப்பை அளிக்கிறார்கள். மீதமுள்ள தொகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விரைவில் இந்த இணைக்கட்டடம் கட்டி முடிக்கப்படும். 

இந்த வேளையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகையால் பெற்றோர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம் என டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்ட டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில், பள்ளியின் பெற்றோர்களுக்கு அதிருப்தியாக இருந்த இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று சொன்னார்.
"என்னைப் பொறுத்தவரை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படவேண்டும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தி, ஆய்வு செய்து அதற்கான தீர்வினை எட்டமுடியும் என்றார் அவர். 

No comments:

Post a Comment