True or Fake?

Friday 31 March 2017

சிறுமி லாரணியா மரணச் சம்பவத்தில் எவ்வித ஒளிவு மறைவுகளுமின்றி தொடர் விசாரணை நடத்தப்படும்

தேசிய ம.இ.கா தகவல் பகுதி
Mic Infozone

சிறுமி லாரணியா மரணச் சம்பவத்தில் எவ்வித ஒளிவு மறைவுகளுமின்றி தொடர் விசாரணை நடத்தப்படும்

கடந்த 20ஆம் திகதி மரணமடைந்த சிறுமி லாரணியா மரணச் சம்பவம் தொடர்பாக எழுந்த பிரச்சனை  சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளை விளக்கமளிக்க கோருமாறு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதற்கிடையில் கடந்த 23ஆம் திகதி சிறுமி லாரணியாவின் தாயார் அவர்தம் உறவினர்களுடன்  என்னைக் காண வந்தனர். அவர்களிடத்தில் இருக்கும் சந்தேகங்களையும் அதிருப்திகளையும் என்னிடம் முறையிட்டுச் சென்றனர்.

அதேநேரத்தில்  அதற்கு மறுநாள் சுகாதார அமைச்சில் உயர் அதிகாரிகளுனான சந்திப்புக் கூட்டத்தில் (Post Cab) இச்சம்பவம் தொடர்பான முழு விசாரணை எவ்வித ஒளிவுமறைவுகளுக்கும் இடமின்றியும் பாராபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஹிஷாம் அவர்களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளேன். எனவே, இம்மரணச் சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு நிச்சயமாக மெளனம் சாதிக்கவில்லை என்பதை இதன்வழி தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.  இச்சம்பவம் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்களுடன் தொடர் விசாரணை நடத்தப்படும் பொது விசாரணைக் குழு வழி மேற்கொள்ளப்படும்.

இவ்வேளையில், சிறுமி லாரணியாவின் மரணத்திற்கு அவரது தாயாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

No comments:

Post a Comment