True or Fake?

Wednesday, 1 March 2017

இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் எனது மாபெரும் இலக்கு – மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை டத்தோ இளங்கோ தகவல்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் எனது மாபெரும் இலக்கு – மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை டத்தோ இளங்கோ தகவல்.

   ஈப்போ – பேராக் மாநில் வாழ் இந்திய சமுதாயத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் தான் தனது முதன்மை இலக்கு என முழங்கிய பேராக் மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும் இம்மாநில இந்தியர்களின் மேம்பாட்டிற்கு வளர்ச்சிக்கும் தேவையானவற்றை வரையறுப்பதே தனது பெரும் பணியாக இருப்பதாகவும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான டத்தோ இளங்கோ கூறினார்.

    நாட்டின் 13வது பொது தேர்தலில் ம இ கா போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவிய பின்னர் மாநில ஆட்சியில் ம இ காவின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராய் நியமனம் பெற்ற தாம் கொடுக்கப்பட்ட பணியினை செம்மையாகவும் அதேவேளையில் ஆக்கப்பூர்வமாகவும் செய்து வருவதாகவும் கூறிய அவர் தனது பணி குறித்தும் அரசாங்கம் வழங்கிய மானியம் குறித்தும் இங்கு மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை என்றார்.

    என் மீதான விமர்சனத்தை தாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அஃது எனது ஆக்கப்பூர்மான நம்  இனத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான தன்முனைப்பாகவே கருதுவதாகவும் கூறினார். டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீர் தலைமையிலான பேராக் மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியமும் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அதில் எவ்வித ஐயத்தையும் யாரும் கொண்டிருக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

   மாநில அரசாங்கம் வழங்கிடும் ஒவ்வொரு மானியம் பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நிறைவாக வழங்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி கடந்தக்காலங்களை காட்டிலும் நடப்பில் மாநில அரசாங்கத்தின் மானியங்கள் அதிகமாய் ம இ கா மூலம் கோரப்பட்டு அஃது இந்திய சமுதாயத்திற்காக திட்டமிட்டப்படி வழங்கப்பட்டு வருவதாகவும் நினைவுகூர்ந்தார்.

     தாம் மாநில ம இ காவின் தலைவராகவும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராகவும் பதவி ஏற்றது முதல் இம்மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள் முதற்கொண்டு ஒவ்வொரு தேவைகளையும் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று அதற்கு நன் நிலையில் தீர்வினையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறிய அவர் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், அதன் மேம்பாடுகளுக்கு தேவையான அடிப்படை உதவிகள் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தி வருவதோடு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் வழங்கி வரும் 10 லட்சம் மானியத்தில் 60 விழுகாடு இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் கல்வி தேவைக்கும் பயன்படுத்தப்படும் வேளையில் 40 விழுகாடு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் அதன் கல்வி உருமாற்றத்திற்காகவும் முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

     கடந்த 2013ஆம் ஆண்டில் அதிகமான இந்திய மாணவர்கள் நன்மை பெற்றதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ 2014ஆம் ஆண்டில்  2600 மாணவர்களும் 2015ஆம் ஆண்டில் 1700 மாணவர்களும் 2016ஆம் ஆண்டில் 2096 மாணவர்கள் நன்மையை அடைந்ததாகவும் கூறிய அவர் பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வந்த நகல் எடுக்கும் இயந்திரம் மீட்டுக் கொண்டதன் பின்னர் அதற்கு மாற்றாக தற்போது நவீன நகல் எடுக்கும் இயந்திரம் விரைவில் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

    அதேவேளையில், நமது சமயம் சார்ந்தும் பண்பாடுகள் சார்ந்தும் நிறைவான மானியங்கள் பயன்படுவதாகவும் ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் ஆலய நிர்வாகங்களின் செயல்பாடுகளுக்கு அதன் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் நிலப்பிரச்னையை எதிர்நோக்கிய ஆலயங்களுக்கு நிலங்களும் ஆலய கட்டுமானப்பணிகளுக்கு மானியங்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆக்கப்பூர்வமாய் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சுமார் 120 ஆலயயங்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் நன்மை பெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

     பேராக் மாநிலத்தில் இந்திய  சமுதாயத்தின் வறுமை ஒழிக்க ஒவ்வொரு செயல்பாடுகளையும் திட்ட மிட்டப்படி தாம் மேற்கொண்டு வருதாக நினைவுக்கூர்ந்த டத்தோ இளங்கோ ஒவ்வொரு நாளும் தமது அலுவலகத்திற்கு உதவி நாடி வருவோருக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்ற உதவிகளை விவேகமாய் வழங்கிய வருவதாகவும் குறிப்பிட்டார்.அதுமட்டுமின்றி,பேராக் மாநிலத்தில் சுமார் 2300 இந்திய அரசு சாரா இயக்கங்கள் இருக்கின்ற நிலையில் அதில் ஆண்டுக்கு 500 பொது இயக்கங்கள் அரசு மானியங்கள் மூலம் நன்மை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

      இதற்கு சில நிகழ்வுகளுக்காக இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு மானியங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறிய அவர் அதில் தமிழ்ப்பள்ளிகளுக்காக நடத்தப்படும் திடல்தடப் போட்டிக்கு வெ.30 ஆயிரம் ஒதுக்கப்படுவதாகவும் நினைவுகூர்ந்தார். பேராக் மாநிலத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு மானியம் ஆற்றில் கொட்டப்படவில்லை.மாறாய், அஃது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு துள்ளியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வழங்கப்பட்டு வருவதாகவும் டத்தோ இளங்கோ பெருமிதமாய் கூறினார்.

      நாட்டில் 70 ஆண்டுகால அரசியல் பயணத்தில் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. தேசிய நிலையிலும் மாநில நிலையிலும் ம இ கா இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தனது சமூக அர்ப்பணிப்பினை ஆக்கப்பூர்வமாய் மேற்கொண்டு வருவதாக கூறிய டத்தோ இளங்கோ பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் மாநில அரசாங்கம் ஒதுக்கிய ஒவ்வொரு மானியமும் முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒவ்வொன்றுக்கும் முறையாக கணக்கும் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

   பேராக் மாநிலத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு மானியமும் முறையாக வழங்கப்பட்டிருப்பதோடு அது குறித்து பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷம்ரி அப்துல் காதீரும் நிறைவு கொண்டிருப்பதாகவும் கூறிய டத்தோ இளங்கோ அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் ஒவ்வொரு மானியமும் மந்திரி பெசாரின் கவனத்திற்கு உட்பட்டே வழங்கப்படுவதாகவும் கூறினார்.

    மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் எனும் நிலையிலும் பேராக் மாநில ம இ கா தலைவர் எனும் நிலையிலும் எனக்காக ஒதுக்கப்பட்ட பணியினை தாம் செம்மையாகவும் கடமை உணர்வோடும் துள்ளியமாய் மேற்கொள்வதாகவும் நினைவுறுத்திய டத்தோ இளங்கோ தனது பணியில் இங்கு எந்த மூடு மந்திரமும் இல்லை என்றார்.எனது பணி இந்திய சமுதாயத்திற்கானது அதனை தாம் அதன் தடம் மாறாமல் விவேகமாய் தொடர்ந்து மேர்கொண்டு வருவதாகவும் பெருமிதமாய் கூறினார்.

    டத்தோ இளங்கோவின் தலைமைத்துவம் குறித்தும் மானியங்கள் குறித்தும் அன்மையகாலமாய் சில விமர்சனங்கள் எழுந்த போது அவருக்கு ஆதரவாய் இதுவரை நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் ஏற்படாத வகையில் ஆலய நிர்வாகங்களும், பொது இயக்கங்களு, அரசியல் தலைவர்களும் உட்பட தலைமையாசிரியர்களும் தலைமையாசிரியர் மன்றங்களும் டத்தோ இளங்கோவிற்கு ஆதரவாய் களமிறங்கி தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்ததோடு டத்தோ இளங்கோவின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டையும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேராக் மாநிலத்தை பொருத்தமட்டில் டத்தோ இளங்கோவின் தலைமைத்துவமும் ஆளுமையும் ம இ காவின் பெரும் பலமாக உருவெடுத்து வரும் நிலையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ம இ கா மீது இந்திய சமுதாயத்தின் பெரும் நம்பிக்கையினை வலுப்படுத்தி வருகிறது. பேராக் மாநிலத்தில் டத்தோ இளங்கோவின் செயல்பாடு ம இ காவின் மறுமலர்ச்சிற்கான அச்சாராம் எனவும் புகழப்படுகிறது என்பது ம இ காவிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்றால் அஃது மிகையல்ல.


No comments:

Post a Comment