True or Fake?

Thursday, 9 March 2017

ம இ காவில் 60 விழுகாடு புதிய முகங்கள் – டத்தோஸ்ரீ சுப்ரா அறிவிப்பு.

ம இ காவில் 60 விழுகாடு புதிய முகங்கள் – டத்தோஸ்ரீ சுப்ரா அறிவிப்பு.

   மலாக்கா – நாட்டின் 14வது பொது தேசிய முன்னணிக்கு சவால் மிக்கதாய் அமைந்திருக்கும் சூழலிலும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியினை பதிவு செய்ய ம இ கா 60 விழுகாடு புதிய முகங்களை தேர்தலில் களமிறக்க இருப்பதாக அதன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

   இந்த புதுமுகங்களில் அரசியல் அணுபமும் மக்கள் நம்பிக்கையும் பெற்ற இளைஞர் மற்றும் மகளிரும் இடம் பெற்றிருப்பர் எனவும் கூறிய சுகாதார அமைச்சருமான அவர் நாட்டின் 14வது பொது தேர்தலில் ம இ கா சிறந்த வெற்றியினை பதிவு செய்யும் என்றும் அவர் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

   கடந்த இரு பொது தேர்தல்களில் ம இ காவின் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலங்கள் நெருங்கி விட்டதாகவும் கூறிய அவர் நாட்டின் 14வது பொது தேர்தலில் இழந்த தொகுதிகளை ம இ கா மீண்டும் வெற்றிக்கொள்ளும் சாத்தியம் இருப்பதோடு அதற்கான சிறந்த யுக்திகளையும் செயல்பாடுகளை ம இ கா விவேகமாய் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

   அதேவேளையில்,நாட்டின் 14வது பொது தேர்தலில் களமிறக்கும் 60 விழுகாடு புதுமுகங்களும் அந்த யுக்தியின் ஒரு சாரம் என்றும் அவர் நினைவுக்கூர்ந்தார்.மேலும்,நடப்பில் ம இ கா தன் வசம் கொண்டிருக்கும் தொகுதிகளை தொடர்ந்து தற்காத்துக் கொள்ளும் நிலையில் மேலும் சில கூடுதல் தோகுதிகளையும் ம இ கா கோரும் என அவர் மலாக்கா ஆயர் குரோ பகுதியில் ம இ கா தாமான் முஸாபார் ஷா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி சமூகநல நிதியினை தொடக்கி வைத்து பேசுகையில் இதனை அவர் கூறினார்.

   இதற்கிடையில்,கட்சியில் கடந்தக்காலங்களில் ஏற்பட்ட மனகசப்புகள் தற்போது ஒரு முடிவிற்கு வந்து விட்டதாகவும் அனைவரும் ஒரே குடையின் கீழ் தற்போது அணி திரண்டு வருவதாகவும் கூறிய அவர் ம இ காவின் அரசியல் பயணமும் இந்திய சமுதாயத்திற்கான அதன் போராட்டமும் சிறந்த இலக்கை நோக்கி நகரும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

    அதுமட்டுமின்றி,நாட்டின் 14வது பொது தேர்தலில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர் கெடா மற்றும் பேராக் மாநிலத்தையும் தேசிய முன்னணி தற்காத்துக் கொள்ளும் என்றார்.


No comments:

Post a Comment