True or Fake?

Tuesday 2 August 2016

ம.இ.கா 70ஆம் ஆண்டு தொடக்க விழா!



கருணையின் அடிப்படையில் அல்லாமல் உரிமையின் அடிப்படையில் நம் சமுதாயத் தேவைகள் நிறைவேற்றப்படும்.

இன்று ம.இ.காவின் 70ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் தொடக்க விழா அதிகாரப்பூர்வமாக ம.இ.காவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ம.இ.காவின் மூத்தத் தலைவரான டத்தோ தான்ஸ்ரீ குமரன் அவர்கள் கலந்து கொண்டு ம.இ.காவின் வரலாற்றுக் குறிப்புகள் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

நாம் கடந்து வந்த பாதைகளை நன்கு புரிந்து கொண்டு, பல காலமாகச் சமுதாயம் எதிர்நோக்கிய எல்லா சவால்களையும் அறிந்து அதனைச் சரிசெய்வதற்காகக் கட்சியும் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த 70ஆம் ஆண்டு விழாவின் நோக்கமாகும். மேலும், வருங்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்த 70ஆம் ஆண்டுக் கொண்டாட்ட விழா பேருதவியாக இருக்கும்.
சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சவால்களும் அதிகமாகத்தான் இருக்கின்றன. இதனை நாம் எதிர்நோக்க வேண்டுமென்றால் நிச்சயமாகக் கட்சி சமுதாயத்திற்குச் சேவையாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த விழாவானது அத்தகைய ஓர் உணர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

வருகின்ற 6ஆம் திகதி நாட்டுப் பிரதமர் அவர்களது தலைமையில் மாபெரும் விருந்து நிகழ்ச்சியும், அதன் பிறகு தொடர்ந்தாற்போல் பல நிகழ்ச்சிகள் மற்ற மற்ற மாநிலங்களிலும் நடைபெறும். மேலும், ம.இ.காவின் சரித்திரக் கண்காட்சி ஒன்றை நடத்துவது குறித்தும் சிந்தித்து வருகின்றோம். ம.இ.கா கடந்து வந்த பாதையைப் பதிவு செய்வதற்காகவும், பல இடங்களில் சிதறி இருக்கக்கூடிய விவரங்களை ஒன்றாகத் திரட்டி ஒருங்கிணைக்கப்பட்ட வெளியீட்டைச் செய்வதற்காகவும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இம்முயற்சியானது இப்பொழுது இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் வருங்காலத் தலைவர்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும். இவையனைத்தும் இந்த 70ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒட்டுமொத்தமாக, கட்சியின் உணர்வை அதிகரித்து, அந்த உணர்வின் அடிப்படையில் எதிர்கால சவால்களை எதிர்நோக்கக்கூடிய சத்தியையும் ஆற்றலையும் அனைவரும் வளர்த்துக் கொண்டு, கருணையின் அடிப்படையில் அல்லாமல் உரிமையின் அடிப்படையில் நம் சமுதாயத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதே ம.இ.காவின் தார்மீக நோக்கமாகும்.

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
01 ஆகஸ்ட்டு 2016





No comments:

Post a Comment