True or Fake?

Thursday 15 September 2016

"ஜகாட்" தமிழ்திரைப்படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

28-வதுமலேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட "ஜகாட்" தமிழ்திரைப்படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"இவ்வெற்றி மலேசிய தமிழ் கலைத் துறைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மேலும், கலைத்துறையில் தங்களின் திறனைக் காட்டி அனைத்துலக ரீதியில் சாதிக்க மேலும் பல இளைஞர்களுக்கும் உந்துதலாகவும் இவ்வெற்றி அமையும். 

அதேநேரத்தில், இத்திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சய் பெருமாள் சிறந்த புதுமுக இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்படிருப்பது மற்றொரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கும் இவ்வேளையில் இவ்வாண்டின் திரைப்பட விழாவில் மலாய் அல்லாத திரைப்படங்களையும் சிறந்த திரைப்பட தேர்வுக்குப் போட்டியிட அனுமதியளித்த ஃபினாஸ்-சுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

முதலில் இப்பிரிவில் போட்டியிட மலாய் அல்லாத திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அது ஒட்டுமொத்த மலேசிய கலைத்துறைக்கும் இன ஒற்றுமைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என ம.இ.கா-வின் நிலைப்பாட்டை நாம் எடுத்துரைத்து அக்கட்டுப்பாடு அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தோம். அதன் அடிப்படையில் இந்த விழாவில் அனைத்து மொழி திரைப்படங்களும் மலேசிய சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட அனுமதியளிக்கப்படிருப்பது வரவேற்கக்கூடியது.

டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்
04 செப்டம்பர் 2016

No comments:

Post a Comment